ஜனாதிபதியை பணம் கொடுத்து வாங்குவதற்கு தயாராகிறதா ஜே.வி.பி?

0
173
tamilnews JVP getting ready buying president nalinda jayathissa

(tamilnews JVP getting ready buying president nalinda jayathissa)

ஜே.வி.பியினால் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ள 20 வது அரசியலமைப்புத் திருத்த சட்டம் குறித்து சில தரப்பினர் தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதன்பொது நாடு பிளவுப்பட போகிறது என்ற நிலைப்பாட்டை உருவாக்கி வருவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சிக்கும் தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கக் கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடும் என்று இவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது சாத்தியமற்ற விடயம்.

தற்போதுள்ள முறையின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஒரு நாடு பணம் கொடுத்து வாங்குவது இலகுவானது என்பது மகிந்த ராஜபக்சவுக்கு சீனா பணம் கொடுத்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல் மூலம் உறுதியாகியுள்ளது.

இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என்று நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

(tamilnews JVP getting ready buying president nalinda jayathissa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites