திருவள்ளூரில் 5 மாத குழந்தையின் கழுத்தை அறுத்த கொடூரனுக்கு போலீசார் வலை வீச்சு

0
97
police looking horrible person brutally thrashed neck tamilnews

police looking horrible person brutally thrashed neck tamilnews

திருவள்ளூரில் 5 மாத குழந்தையைத் தூக்கிச் சென்று, கொடூரமாக கழுத்தை அறுத்து வீசிச் சென்ற கொடூர நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராபினின் குடும்பத்தினர் காற்று வரவில்லை என கதவைத் திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளனர்.

அதிகாலை 4 மணி அளவில் ராபினின் மனைவி லிடியா தனக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த தமது 5 மாத பெண் குழந்தையைக் காணவில்லை என பதறியுள்ளார்.

அப்போது வீட்டுக்கு வெளியே குழந்தையின் கழுத்தும், ஒரு புற காதும் அறுக்கப்பட்ட நிலையில், துடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 5 மாத குழந்தைக்கு தையல் போடப்பட்டது.

குழந்தையின் கழுத்திலும், காதிலும் நகை இல்லாத நிலையில், கழுத்தறுக்கப்பட்டதற்கு காரணம் முன்விரோதமா? குடும்பப் பகையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் தந்தை ராபின், அவரது தம்பி, மேலும் சில உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

police looking horrible person brutally thrashed neck tamilnews

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :