பணம் பெற்றாரா… இல்லையா… பதிலளிக்க வேண்டியது மகிந்தவின் பொறுப்பு

0
314
mahindha answer people court activities ranjan ramanayaka

நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை மகிந்த ராஜபக்ஷ தொடர்பில் செய்தி உண்மைக்கு புறம்பானதாக காணப்படுமாயின் குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்க தாக்கல் செய்ய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். mahindha answer people court activities ranjan ramanayaka

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு சீனா துறைமுக அபிவிருத்தியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றிடமிருந்து 7.9 மில்லியன் டொலர் பணத்தைப் பெற்றுள்ளதாக நிவ்யோர் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

சீன துறைமுக அபிவிருத்தியுடன் தொடர்புடைய நிறுவனத்தின் (சய்னா ஹார்பர்) ஊடாகவே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும்.

மேலும் இந்த சம்பவத்துடன் பௌத்த பிக்கு ஒருவரும் தொடர்புபட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனவே, அமெரிக்க ஊடகம் வெளியிட்ட குறித்த தகவல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன் நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

tags :- mahindha answer people court activities ranjan ramanayaka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites