செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ ஏற்ற தட்பவெப்பநிலை உள்ளது: மயில்சாமி அண்ணாதுரை

0
85
climate necessary planet Mars indiatamilnews tamilnews

climate necessary planet Mars indiatamilnews tamilnews

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவையான நீர், நிலம் மற்றும் தட்பவெப்ப நிலை உள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திராயன், செவ்வாயை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் போன்ற செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்யா செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது.

மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி தருகிறோம். இதனால் உலக தரம்வாய்ந்த பொறியாளர்களாக உருவாக முடியும். செவ்வாய், சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா? பயிர் சாகுபடி செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

இதில், நிலவைவிட செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ அதிக வாய்ப்புள்ளது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றார்போல் நீர், நிலம் மற்றும் தட்பவெப்ப நிலை உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தற்போது தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்றார்.

climate necessary planet Mars indiatamilnews tamilnews

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :