முதலமைச்சர், அனந்தி சசிதரன், சிவநேசன் பதவி விலக வேண்டும்

0
123
chief minister c.v.wigneswaran, Ananthi Sasitharan, Sivanesan

வடமாகாண சபையில் தனது அமைச்சை தற்போது வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது என வடமாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். (chief minister c.v.wigneswaran, Ananthi Sasitharan, Sivanesan)

அத்துடன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் தவறைச் சுட்டிக்காட்டவே அவரது உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் ப. டெனிஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்திற்கு தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த பின்னர், கருத்து வெளியிட்டுள்ள டெனிஸ்வரன்,

‘எனது முயற்சி அநீதிக்கு எதிரானது. முதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

என்னை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று எதிர்வரும் 9 ஆம் திகதி ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையைப் பிறப்பிக்கும்.

அத்துடன் எனது அமைச்சை தற்போது வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது. எனக்கு நீதி கிடைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கைத் தொடர்ந்தேன். பழைய அமைச்சு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது.

என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக, இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்து விட்டு எனது பழைய அமைச்சை தாருங்கள்.

மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

tags :- chief minister c.v.wigneswaran, Ananthi Sasitharan, Sivanesan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites