கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புலம் பெயர் உறவுகளால் இதய நோய் சிகிசை கருவிகள் அன்பளிப்பு

0
139
cardiovascular drugs donated immigrant relations Kilinochchi Hospital

(cardiovascular drugs donated immigrant relations Kilinochchi Hospital)

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 8.6 மில்லியன் ரூபா பெறுமதியான இதயநோய் சிகிசை கருவிகள் புலம்பெயர் உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அதி நவீன எக்கோ இயந்திரம், இதய நோய் சிகிச்சை இயந்திரங்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.

லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினரும், புலம்பெயர்ந்த இலங்கையரான வரதராஜன் என்பவரும் லண்டன் Assist RR அமைப்பும் இணைந்து 8 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்..

இதில் வரதராஜன் என்பவரின் நிதி உதவியில் அதி நவீன எக்கோ இயந்திரத்தினை ஆறு மில்லியன் ரூபாவுக்கு வழங்கியுள்ளார்.

இதுவரை காலமும் இதய நோய் பரிசோதனைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்கு கிளிநொச்சியிலிருந்து நோயாளிகள் யாழ்ப்பாணம், வவுனியா வைத்தியசாலைகளுக்கே அனுப்பப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பெறுமதிமிக்க மிக அவசியமான உபகரணங்களை வழங்கி வைத்து புலம்பெயர் உறவுகளுக்கு மாவட்ட வைத்தியசாலை சார்பாகவும், கிளிநொச்சி மக்கள் சார்பாக தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வைத்தியசாலை பணிப்பாளர் மைதிலி தெரிவித்தார்

பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் மைதிலி, லண்டன் இதயநோய் நிபுணர் மயூரன், கனகதுர்கை அம்மன் ஆலய நிர்வாகிகள் மருத்துவர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அகியோர் கலந்துகொண்டனர்.

(cardiovascular drugs donated immigrant relations Kilinochchi Hospital)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites