கைரேகைகளை திருடி 6 ஆயிரம் சிம் கார்டு, ரேஷன் பொருட்கள் வாங்கி மோசடி

0
495
6000 simcard ration materials stolen fingerprints office

6000 simcard ration materials stolen fingerprints office

பத்திரப்பதிவு அலுவலகத்தில் கைரேகைகளை திருடி 6 ஆயிரம் சிம்கார்டு, ரேஷன் பொருட்கள் வாங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலத்தின் தர்மாவரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் அதேபகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து வருகிறார்.

இவர் 6 ஆயிரம் செல்போன் சிம் கார்டு பெற்று, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து அதிக அளவு கமிஷன் பெற்றது தெரிந்தது. மேலும், சந்தோஷ் குமார் வாங்கிய சிம் கார்டுகளுக்கு ரீ-சார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தவில்லை என தெரிந்தது. இதுகுறித்து, சிம் கார்டு நிறுவனங்கள் சார்பில் தர்மாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலம் விற்றவர்கள் மற்றும் நிலம் வாங்கியவர்களின் கைரேகைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது.

அவ்வாறு பதிவு செய்தவர்களின் கைரேகைகளை பத்திரப்பதிவு வெப்சைட்டிலிருந்து டவுன்லோடு செய்து, அந்த கைரேகைகளை ரப்பர் ஸ்டாம்பு தயார் செய்து 6 ஆயிரம் சிம்கார்டு பெற்றது தெரியவந்தது.

மேலும், ரேஷன் கடை டீலர்களுடன் இணைந்து ரேஷன் கடைகளிலும் போலி கைரேகைகளை பதிவு செய்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இதற்கு உடந்தையாக இருந்ததாக ரேஷன் கடை டீலர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6000 simcard ration materials stolen fingerprints office

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :