மகளை கௌரவக் கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த தந்தை

0
163
suffered death love girlfriend committed suicide indiatamilnews

19 yearold Muslim woman Muzaffarnagar murdered father buried

முஜாபர் நகரில் ஒரு 19 வயது முஸ்லீம் பெண் தனது தந்தையால் கௌரவக் கொலை செய்யப்பட்டு வீட்டிலேயே புதைக்கப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முசாபர் நகர் கக்ராலி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சரகத்தைச் சேர்ந்த மசூத் என்பவரின் மகள் சாகிரா இவருக்கு அவர் வீட்டின் எதிரில் வசித்த முனாசிப் (வயது24) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் பற்றி அவளுடைய குடும்பத்திற்கு தெரிந்தவுடன், அவர்கள் கடுமையாக எதிர்த்தனர் மற்றும் முனாசிப் வீட்டிற்குள் நுழைய தடை விதித்தனர்.

சாகிரா மீது நிறைய தடைகள் இருந்தன, மேலும் அவர் வீட்டை விட்டு வெளியேறினால் அல்லது முனாசிப்பை சந்தித்தால் அவரைக் கொன்றுவிடுவதாக தந்தை அச்சுறுத்தி இருந்தார்.

இருந்தாலும் காதல் ஜோடி இரவில் எல்லோரும் தூங்கியது இருவரும் மொபைல் போனில் பேசிக்கொண்டனர். சாகிராவுக்கு முனாசிப் ஒரு மொபைல் போன் வழங்கி இருந்தார்.

துரதிருஷ்டவசமாக, மசூத் இரவு முனாசிப்புடன் ஒருநாள் பேசும் போது சாகிராவைப் பிடித்துக்கொண்டார்.

போனை பிடிங்கு கொண்டு அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தார். சாகிராவுக்கு ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து அவரது காதலரை சந்தித்தார். பின்னர் இருவரும் தப்பி ஓடத் திட்டமிட்டபோது, கிராமத்தின் புறநகர்ப்பகுதியில் மசூது அவர்களை மடக்கி பிடித்தார்.

வீட்டிற்கு அழைத்துச் சென்ற மகளை அவர் கொலை செய்தார். பின்னர் வீட்டில் ஒரு கட்டுமான வேலை நடந்து வரும் பகுதியில் சாகிரா உடலை அடக்கம் செய்தார்.
சாகிராவை காணவில்லை என்று உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் மசூதை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சாகிரா உடலை தோண்டி எடுத்தனர். கௌரவக் கொலையில் தொடர்புடைய மசூத், அவரது மனைவி, மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

19 yearold Muslim woman Muzaffarnagar murdered father buried

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :