ஊர்காவற்துறையில் இராணுவ வீரர் சுட்டுக்கொலை; அப்பகுதியில் பரபரப்பு

0
116
soldier shot dead Kayts

ஊர்காவற்துறை அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். (soldier shot dead Kayts)

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரர் 22 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், குறித்த இராணுவ வீரரின் மரணம் தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ வீரர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

tags :- soldier shot dead Kayts

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites