சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்???

0
293
Samuthirika Lakshanam Today Horoscope

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவள் தான் பேரழகி .(Samuthirika Lakshanam Today Horoscope )

ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்கவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.

ஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோ டொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச் சியாக வாழ்வாள்.

பெண்களின் தொடை வாழைத்தண்டு போல் பளபள என்று இருக்க வேண் டும். முழங்கால் சிறிதாக இருக்க வே ண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந் திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.

பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண் டும்.

உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.

மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண் டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர் மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மருண்ட விழி களில் சில அமைப்புகள் உண்டு

பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.

மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்பு தான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்ச ராதல் போன்ற யோகம் உண்டு.

எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கியபடி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Keyword:Samuthirika Lakshanam Today Horoscope