இந்தியாவால் முடியும், அமெரிக்காவுக்கு முடியாது : மஹிந்த

0
135
Mahinda Rajapaksa voices Vijayakala Maheswaran claim gov

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என முன்னாள் ஆட்சியாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வு கூறியுள்ளார்.(president election USA india mahinda rajapaksa)

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,

“அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.

அவர்களின் வெளிவிவகாரக் கொள்கைகள் சற்று கூடியதாக, குறைந்ததாக அல்லது சமமானதாகவே உள்ளது.”

அதேவேளை, அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடனான சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ நாங்கள் சந்தித்துக் கொண்டோம். தூதுவர் ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, மரியாதை நிமித்தமாக, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்திப்பது வழக்கம். இது ஒரு வழக்கமாக சந்திப்பு மட்டுமே.” என்று கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
“இந்த தேர்தலின் இறுதி முடிவுகளில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செல்வாக்கைச் செலுத்துகிறது.

அத்தகைய தலையீடுகளைச் சமாளிக்கும் வகையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது.

எனினும் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யாது என்று நம்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

tags :- president election USA india mahinda rajapaksa

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites