முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை மீட்ட 12 பொலிஸாருக்கு கௌரவிப்பு

0
113
Northern Province honored 12 Police Officers performed LTTEs weaponry

(Northern Province honored 12 Police Officers performed LTTEs weaponry)

அண்மையில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் குண்டு உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை மீட்ட போது சிறப்பாக செயற்பட்ட 12 பொலிஸ் அதிகாரிகளுக்கு வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

இதன்போது அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிசாரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் அது தொடர்பான கைது நடவடிக்கைகளின் போது, சிறப்பாக ஈடுபட்டவர்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பன்னிரண்டு பேர் வடமாகான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வினை தொடர்ந்து பொலிஸ் உயர் மட்ட குழுவினரின் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

(Northern Province honored 12 Police Officers performed LTTEs weaponry)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites