நிரபராதி என நிரூபிக்கும் வரை சங்கத்தில் உறுப்பினராக மாட்டேன்: நடிகர் திலீப்

0
449
Malayalamactor Dilip organization proven presence public

Malayalamactor Dilip organization proven presence public

நான் நிரபராதி என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கும் வரை எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை என மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நடிகர் திலீப் , மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அப்போது மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்புக்கு இன்னசெண்ட் தலைமை வகித்தார். அவர் தனது உடல்நலக்குறைவால் சங்கத்திலிருந்து வெளியேறினார்.

இதனால் சமீபத்தில் நடைபெற்ற அம்மா அமைப்பின் பொதுக்குழுக்கூட்டத்தில் நடிகர் மோகன்லால் நடிகர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த நடிகர் திலீப் மீண்டும் இணைந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ரீமா கள்ளிங்கல், கீத்து மோகன் தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட 4 நடிகைகள் நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறினர். மேலும் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல்களை அம்மா அமைப்பு எளிதாக கடந்து செல்வதாகவும் வெளியேறிய நடிகைகள் குற்றம் சாட்டினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் திலீப் அம்மா சங்கத்தின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் எனக்கு எதிராக தொடரப்பட்டுளள வழக்கில் நான் நிரபராதி என மக்கள் முன்னிலையில் நிரூபிக்கும் வரை நான் எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை.

அம்மா அமைப்பை பலர் அவதூறாக பேசுவது எனக்கு கஷ்டமாக உள்ளது. நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

Malayalamactor Dilip organization proven presence public

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :