சீனாவிடம் பெற்ற பணத்தை மஹிந்த டுபாயில் வைத்துள்ளாராம்..!

0
103
mahinda rajapaksa deposited china money dubai

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.(mahinda rajapaksa deposited china money dubai)

இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அதிகாரபூர்வமாக விசாரித்துள்ளார் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தகவல் வெளியிட்டுள்ளார்.

“நம்பகமான தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை இலங்கை எழுப்பியுள்ளது.

ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து 7.6 மில்லியன் டொலர் கிடைத்ததாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதன் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்சில் அந்தப் பணம் வைப்பிலிடப்பட்டது பற்றிய தகவல் இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

tags :- mahinda rajapaksa deposited china money dubai

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites