கடன் பிரச்சனையால் தாலி கட்டிய மனைவி விற்பனை

0
115
incident caused crisis brother shocked indiatamilnews tamilnews

incident caused crisis brother shocked indiatamilnews tamilnews

கடன் பிரச்சனையால் தாலி கட்டிய மனைவியை அண்ணனுக்கே விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கொவளகுண்டாவைச் சேர்ந்தவர் மத்திலெட்டி. ஆட்டோ டிரைவரான இவருக்கு 4 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.

மத்திலெட்டி மதுபோதைக்கு அடிமையாகி பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை அடைப்பதற்காக சென்ற ஆண்டு தனக்கு பிறந்த குழந்தையை ரூ 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யததாக கூறப்படுகிறது.

ஆனாலும் மத்திலேட்டி குடியை மட்டும் விடவில்லை. தொடர்ந்து குடித்துக் கொண்டை இருந்தார். இதனால் அவர் மேலும், மேலும் கடன் வாங்கினார். அவர் வாங்கிய கடன் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்தது.

இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான மத்திலேட்டி இந்த 15 லட்சம் ரூபாய் கடனுக்காக தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை 5 லட்ச ரூபாய்க்கு தனது அண்ணனிடம் விற்று ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் மனைவி வெங்கடம்மாவை கையெழுத்திட தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் வெறுத்து போன வெங்கடம்மா, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

மேலும் தனது கணவர் குறித்து பெண்கள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்திலெட்டியை தேடி வருகின்றனர். தாலி கட்டிய மனைவியை அண்ணனுக்கு கணவன் விற்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

incident caused crisis brother shocked indiatamilnews tamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :