ரெஜினாவின் படுகொலையைக் கண்டுகொள்ளாத யாழ். மக்கள்; கதறும் குடும்பம்

0
192
Hartal not authorized Jaffna

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 06 வயது மாணவியின் கொலையைக் கண்டித்தும், நீதி கோரியும் பூரண கடையடைப்பு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவில்லை. (Hartal not authorized Jaffna)

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நீதி கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே வடக்கு மாகாணம் முழுவதும் இன்றைய தினம் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் பாடசாலைகள், பேரூந்துகள், கடைகள் என்பன ஒரு சில இடங்களில் இயங்காவிட்டாலும் ஏனைய இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு ஹர்த்தால் முழுமையாக நடைபெறாது சில இடங்களில் சிலர் மட்டுமே கடைகளைப் பூட்டியும் பேரூந்துகள் ஓடாமலும், பாடசாலைகள் இயங்காமலும் இருக்கின்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்ட இந்தக் ஹர்த்தாலுக்கு பல தரப்பினர்களும் ஆதரவைத் தெரிவிக்காத நிலையிலையே, இன்றைய தினமும் ஹர்த்தால் பூரணமாக நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- Hartal not authorized Jaffna

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites