இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியுடன் நேற்றைய போட்டிகள் அனைத்தும் ஒரே பார்வையில்..!

0
776

(FIFA world cup russia highlights 28 06)
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 4 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் செனகல்-கொலம்பிய அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றியை பதிவுசெய்தது.

மற்றுமொரு எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக இருந்த இங்கிலாந்து  மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான போட்டி அமைந்திருந்தது. இதில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல்களின் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.

மூன்றாவது போட்டியில் ஜப்பான் அணி மற்றும் போலாந்து அணிகள் மோதின. இப்போட்டி 1-0 என்ற கணக்கில் போலாந்து அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

நான்காவது போட்டியில் பனாமா அணியை 1-0 என்ற கணக்கில் தியூனீசியா அணி வீழத்தியமை குறிப்பிடத்தக்கது.

Video Source: FIFATV

FIFA world cup russia highlights 28 06
Timetamil.com