ஹீரோவாக மாறிய பிச்சை கேட்கும் நபர் : மாத்தறையில் சம்பவம்

0
203
beggar matara district

மாத்தறையில் யாசகம் கேட்கும் நபர் ஒருவர் செய்த வேலை மிகவும் பரபரப்பாக பேசப்படுகின்றது. (beggar matara district)

யாசகர் ஒருவர் மக்களுக்கு தன்சல் ஒன்று கொடுத்த சம்பவம் நேற்று (28) மாத்தறை நகரில் பதிவாகியுள்ளது.

பொசன் போயா தினத்திற்காக ரோஸ் பான், வடை மற்றும் வாழைப் பழம் தன்சல் ஒன்றை மாத்தறை நகர சபை முன்பாக யாசகம் கேட்கும் 74 வயதான அப்புஹாமி எனும் நபர் வழங்கியுள்ளார்.

மத்துகம பிரதேச வாசியான இவர் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்து யாசகராக வீதிகளில் சுற்றித் திரிந்து கடந்த 12 வருடங்களில் சேமித்த ஒரு இலட்சத்து 60 ரூபா பணத்தின் மூலமே இந்த தன்சலை வழங்கியுள்ளார்.

எனினும் மக்களிடம் இருந்து எந்த உதவியும் பெறாமல் இந்த தன்சலை குறித்த நபர் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ” எனக்கு யாசகத்தில் கிடைக்கும் பணத்தை தினமும் ரணதுங்க முதலாளியிடம் கொடுத்து வந்தேன். மேலும் சூதாட்டத்திலும் வெற்றி பெறும் பணத்தையும் அவரிடம் கொடுத்து வந்தேன். எல்லாம் இரண்டு லட்சம் கிட்டியிருக்கும். தினமும் மக்கள் எனக்கு பணம் கொடுக்கின்றனர். ஆதலால் மக்களுக்கு எனது செலவில் ஒரு வேளை சாப்பாடு கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.

சோறும் கரியும் கொடுப்பதற்கு எனக்கு வசதியில்லை. அதனால் ரோஸ் பான், வடை மற்றும் வாழைப் பழம் ஆகியவற்றை கொடுக்க தீர்மானித்தேன். இதற்காக நான் ஒருவரிடமிருந்தும் பணம் வசூலிக்கவில்லை. யாசகத்திலும், சூதாட்டத்திலும் கிடைத்த பணத்தை பயன்படுத்தியே தன்சல் வழங்கினேன் என்றார்.

யாசகரின் இந்த செயற்பாடு மாத்தறை நகரில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

tags :- beggar matara district

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites