இனவெறியின் உச்சத்தில் சூரிச் பல்கலைகழகம்!!

0
143
asians zurichs ETH university racism raised

சுவிட்சர்லாந்தின் மதிப்புமிக்க ETH பல்கலைக்கழகத்தில், ஆசிய மாணவர்கள் சமீபத்தில் இனவெறி தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள விடயம் வெளிவந்துள்ளது.asians zurichs ETH university racism raised

இனவெறியை தூண்டும் வாசகங்கள், ETH பல்கலைக்கழக வளாகத்திலும், மாணவர்கள் பயன்படுத்தும் லிப்ட் கதவிலும் ஆசிய நாட்டவர்களுக்கு இடம் இல்லை என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஆசிய மாணவர்களின் ஆசனங்களில் ஆபாச சித்திரங்களை வரைந்தும், இனவெறி வாசகங்களை எழுதியும் வைத்துள்ளனர்.

குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என ஒரு சில மாணவர்களும், இதை கண்டுகொள்ள வேண்டாம் என ஒரு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளிக்கும் வகையில் சில ஆசிய மாணவர்கள் பொலிசாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

இதேவேளையில் பல்கலைக்கழக துணைவேந்தர் Sarah Springman எல்லா மாணவர்களிடையே அவசர கூட்டத்தை கூட்டி பல்கலைகழகத்தின் கலாசாரத்தை மதித்து நடக்குமாறு எச்சரித்துள்ளார்.

மதிக்காத எவரும் தண்டனைக்கு உள்ளாவர் என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

tags :- asians zurichs ETH university racism raised
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்