யாழ். மானிப்பாயில் பெண் கழுத்தறுத்து படுகொலை

0
244
Woman murdered Manipay, Jaffna

யாழ். மானிப்பாய் சங்கரபிள்ளை வீதியில் இன்று காலை பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Woman murdered Manipay, Jaffna)

இதில் சுமார் 70 வயதுடைய கந்தையா நீலாதேவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற சிலருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு, கொலைகாரர்கள் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Woman murdered Manipay, Jaffna

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites