மனைவி உலக்கையால் தாக்கியதில் கணவன் பலி

0
118
Wife’s assault Husband killed

உலக்கையால் தாக்கி தனது கணவனை கொலை செய்த மனைவி ஒருவரை நிவிதிகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (Wife’s assault Husband killed)

நிவிதிகலை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடிபோதையில் வீட்டிற்குச் சென்ற தனது கணவன் தன்னை தினமும் துன்புறுத்துவதாகவும் சந்தேக நபரான உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனக்கும் கணவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் குறித்த பெண் தனது கணவனை உலக்கையால் தலையில் தாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காயமடைந்த கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளதோடு, உயிரிழந்தவரின் சடலத்தை கலவான வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இன்றைய தினம் பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags :- Wife’s assault Husband killed

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites