இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி,
28.6.18 வியாழக்கிழமை, பவுர்ணமி திதி காலை 11:02 வரை;
அதன் பின் தேய்பிறை பிரதமை திதி, மூலம் நட்சத்திரம் மதியம் 1:19 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : காலை 11:02 மணி வரை கிரிவலம், தட்சிணாமூர்த்தி வழிபாடு.
மேஷம்:
அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். ஆதாயம் உயரும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.
ரிஷபம்:
வெகுநாள் குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்க பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர் குழந்தைகளின் நற்செயல் பெருமையை தேடித் தரும்.
மிதுனம்:
முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். இயலாதவருக்கு இயன்ற உதவி செய்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கடகம்:
பணியில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். லாபம் அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.
சிம்மம்:
மனதில் தன்னம்பிக்கை அதிரிக்கும். முயற்சிக்குரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். சமூக அந்தஸ்து உயரும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.
கன்னி:
மதிநுட்பத்துடன் செயல்பட்டு வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். குடும்ப தேவைகள் தாராள செலவில் நிறைவேறும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.
துலாம்:
முக்கிய பணி நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் பரிசு, பாராட்டு பெறுவர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
விருச்சிகம்:
உறவினரால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறுகளை சரிசெய்வீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். பிள்ளைகளால் நன்மை உண்டு.
தனுசு:
சுறுசுறுப்புடன் பணி்களை விரைந்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் முன்னேற்றம் உருவாகும். ஆதாயம் அதிகரிக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.
மகரம்:
திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமை குறையும். உபரி வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
கும்பம்:
முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சியும் உழைப்பும் அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.
மீனம்:
பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணம் வசூலிக்க இதமான அணுகுமுறை நல்லது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.
மேலும் பல சோதிட தகவல்கள்
- அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ?
-
மலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..?
- பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
- வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்