விகாரையில் மூன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

0
213
three year old boy’s body recovered vihara

ஹபராதுவ, கொக்வத்த நிக்ரோதாராம விகாரையில் இருந்த மீன் வளர்க்கும் குளம் ஒன்றில் வீழ்ந்து மூன்றரை வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். (three year old boy’s body recovered vihara)

தனது பாட்டியுடன் குறித்த சிறுவன் விகாரைக்கு சென்று, அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் மற்றைய சிறுவர்களுடன் குறித்த சிறுவன் இல்லாமையைக் கண்ட அவனது பாட்டி, சிறுவனை அங்கு தேடியுள்ளார்.

இதன்போது, விகாரையில் இருந்த மீன் வளர்க்கும் குளத்தில் சிறுவன் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.

உடனே குறித்த சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சிறுவன் முன்பள்ளி மாணவன் எனவும் இந்த விகாரையின் விகாராதிபதியின் சகோதரனின் மகன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

tags :- three year old boy’s body recovered vihara

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites