விமான பயணிகளுக்கு இனி இந்த தொல்லை இருக்காது…!

0
165
nasas aircraft modifications make planes 70 percent quieter

(nasas aircraft modifications make planes 70 percent quieter)
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் ஒலியைக் குறைக்க நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், பல்வேறு சோதனைகளுக்குப் பின் அதில் குறிப்பிடதக்க வெற்றியை எட்டியுள்ளது.

விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70% குறைந்துள்ளது. இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த அளவுக்கு விமானத்தின் இரைச்சல் குறைக்கப்படுவது விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத படி உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

nasas aircraft modifications make planes 70 percent quieter

Tamil News