யாழ். மயிலிட்டி துறைமுகம் 200 மில்லியனில் ஆழப்படுத்தப்படவுள்ளது

0
125
myliddy Port Jaffna deepened cost 200 millio developing

(myliddy Port Jaffna deepened cost 200 millio developing)
யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் ஆழப்படுத்தப்பட்டு நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

யூ.என்.டீ.பி மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு ஆகியன இணைந்து மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளன.

இதற்கமைய இன்றைய தினம் மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு அதிகாரிகள் மற்றும் யூ.என்.டீ.பி அதிகாரிகள் மயிலிட்டி துறைமுகத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, தெல்லிப்பழை பிரதேச செயலர் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த அபிவிருத்தி திட்டம் 150 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் துறைமுகத்தை ஆழப்படுத்துதல் மீன்பிடி படகுகளுக்கான எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல் மற்றும் மீனவர்களுக்கான கழிப்பறை, குடிதண்ணீர் வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

(myliddy Port Jaffna deepened cost 200 millio developing)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites