அரசியல்வாதிகளின் உடந்தையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன – நாடு பாரிய ஆபத்தில் உள்ளது

0
307
Mahinda Rajapaksa said activities underworld groups increasing daily

(Mahinda Rajapaksa said activities underworld groups increasing daily)

பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக நாடு தற்போது பாரிய சிக்கலில் உள்ளது.

அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனேயே சில பாதாள குழுக்கள் செயற்படுகின்றன.

இதன்காரணமாக நாளுக்கு நாள் பாதாள உலக குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எமது ஆட்சியின் போதே பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் நிலவியது.

எமது ஆட்சியின் போது பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த போதும், நாட்டில் தற்போது பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இவ்வாறானவர்கள் அரசியல்வாதிகளின் அனுசரணையிலேயே இயங்கிக் கொண்டிருப்பது, மிகவும் பயங்கரமான நிலையாகும்.

இவ்வாறான நிலை தொடர்ந்து நீடித்தால் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நிலை தோன்றும்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி எமது கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு முன் வருவார்களானால் அவர்களுக்கு அங்கத்துவம் வழங்குவதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை.

அத்துடன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு வந்து விசாரணைக்கு முகம்கொடுக்குமாறு கோரியுள்ளோம்.

எனினும், அவரின் பிள்ளைகளின் பரீட்சைகள் காரணமாக அவர் இலங்கை வருவதற்கு இன்னும் ஒரு மாத காலம் வரை அவசியம் என அவர் அறிவித்துள்ளார்.

(Mahinda Rajapaksa said activities underworld groups increasing daily)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites