உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா

0
529
Kairegai Palangal Today Horoscope

கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இதில் பல வகை இருக்கிறது… ஒருவரின் ரேகையை பார்த்து அவர்களது ஆரோக்கியம், செல்வம், வேலை, திருமணம் வாழ்க்கை என பலவற்றை கூறுகிறார்கள்.

கைரேகை ஜோதிடம் என்பது பண்டையக் காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். ஒருவர் கையில் காணப்படும் ஒருசில குறிகள், ரேகைகள் வைத்து இவர்கள் கணிப்பு கூறுகிறார்கள்.

இந்த கட்டுகையில் ஒருவரது கைரேகையில் காணப்படும் தனித்தன்மையான குறிகளை வைத்து அவர்களது குணாதியங்கள், பர்சனாலிட்டி எப்படியானதாக இருக்கும் என்று கான்விருக்கிறோம்…

செவ்வகம்

Kairegai Palangal Today Horoscope
படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் செவ்வகம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பாதுகாப்பு மற்றும் தைரியம் நிறைந்த நபராக இருப்பார்.

இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நபர்களை பாதுகாப்பாக உணர செய்வார்கள். தங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் ஆபத்தில் இருந்தால், தங்களால் முடிந்த வரை எவ்வளவு கடினமான எல்லைக்கு சென்றாவது காப்பாற்ற நினைப்பார்கள்.

வாழ்வில் மக்களுக்கு மதிப்பளிக்க தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உறவுகளை தங்கள் உலகமாக கருதி நடப்பார்கள்.

முக்கோணம்!

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் முக்கோணம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் பல பரிணாமங்கள் மற்றும் தொன்மை வாய்ந்த எண்ணம் கொண்டவராக இருப்பார்.

இவர்களது சிந்தனை மற்றும் கருத்து பல கோணங்கள் கொண்டிருக்கும்.இதனால் இவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்தன்மை வாய்ந்து காணப்படுவார்கள். மேலும், இவர்கள் சீரான, நிலையான மற்றும் பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எத்தனை பெரிய தடைகள் வந்தாலும் சரி, அதை தனது வித்தியாசமான கோணத்தில் கண்டு அதற்கான தீர்வை கண்டறிவார்கள். தங்கள் வார்த்தைக்கு பெரும் மதிப்பு கொடுப்பார்கள்.

திரிசூலம்!

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் திரிசூலம் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் தைரியமான முடிவுகள் எடுக்கும் மற்றும் எதையும் நேரடியாக கையாளும் குணம் கொண்டிருப்பார்கள்.

இவர்களிடம் கருத்துக்கள், அறிவாற்றல் மற்றும் சிந்தனைகள் தெளிவாக காணப்படும். இவர்களை சிலர் மிரட்டி பார்க்க நினைப்பார்கள், காரணம் இவர்கள் நேரான, நேர்மையான வழியில் பயணிப்பதால்.

மேலும், இவர்களது அறிவாற்றல் அறிவிலிகள் முட்டாள்தனம் என்பார்கள், அறிவாளிகள் பாராட்டி மகிழ்வார்கள்.

வட்டம் / புள்ளி

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் வட்ட / புள்ளி வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் சீரான கவனம், உறுதியான முடிவு மற்றும் எந்நேரத்தில் ஒரு வேலை கொடுத்தாலும் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருப்பார்கள்.

தங்கள் இலட்சியங்கள் சார்ந்து கவனமாக செயற்படுவார்கள். தங்கள் இதயத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்துவார்கள்., செயற்படுத்துவார்கள்.

இவர்கள் தங்கள் இலட்சிய பாதையில் இருந்து அவ்வளவு சீக்கிரம் விலகிவிட மாட்டார்கள். யாராலும் இவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுத்த முடியாது. இவர்கள் தங்கள் மனதை… தாங்கள் வகுத்து வைத்த பாதைக்கு ஏற்ப தயாரிப்படுத்தி வைத்திருப்பார்கள். நடுவே யார், எது வந்தாலும் கண்கொள்ள மாட்டார்கள்.

நட்சத்திரம்!

Kairegai Palangal Today Horoscope

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் நட்சத்திர வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபரின் வாழ்க்கை ஒரு நாள் சாதகமாகவும், மறுநாள் பாதகமாகவும் இருக்கும்.

இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், திறமையானவர்கள். ஆனால், வெற்றிப்பெற கொஞ்சம் காத்திருக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.

கம்பிகள்!

Kairegai Palangal Today Horoscope

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் மேய்ந்த கம்பிகள் போன்ற வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர்கள் கிரியேட்டிவ் சிந்தனை மற்றும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

ஒரு தனி நபராக காணும் போது இவர்களது குணாதியங்கள் சிக்கலானதாக காணப்படும். மற்றவர்கள் இவர்களை எளிதாக புரிந்துக் கொள்ள இயலாது. இவர்களிடம் பல பரிணாமங்கள் காணலாம், இவர்கள் சில சமயம் மர்மமான நபராகவும் காணப்படுவார்கள்.

காண சிக்கலான நபர்களாக இருக்கும் இவர்கள், எந்தவிதமான சிக்கலான சூழலையும் அதை புரிந்து கடந்து வந்துவிடுவார்கள். சிக்கலை ஏற்படுத்துவது சுவாரஸ்யம் என்றால், அந்த சிக்கலை அவிழ்ப்பது இவர்களுக்கு பிடித்த சுவாரஸ்யம்.

எக்ஸ்!

படத்தில் காண்பித்திருப்பது போல உங்கள் உள்ளங்கையின் அடி பாகத்தில், கட்டைவிரலுக்கு எதிர்புறத்தில் எக்ஸ் வடிவத்தில் ரேகை இருந்தால்.. அந்த நபர் எதையும் ஆராய்ந்து, கவனத்துடன், தீர்க்கமான முறையில் கையாள்பவராக இருப்பார்கள்.

எதற்கும் தலைவணங்க மாட்டார்கள், தனக்கு ஈடாக இல்லாத எவற்றுக்கும் நோ தான் இவர்களது பதிலாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்தும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என்று குணாதியம் கொண்டிருப்பார்கள்.

எதையும் உற்று நோக்கி கவனிப்பார்கள். மேலோட்டமாக எதையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று இல்லாமல், தன் முழு திறன் கொண்டு, ஒரு விஷயத்தை, பொருளை எத்தனை சிரமப்பட்டு அழகாக்க முடியுமோ, ரிசல்டை சிறப்பாக வெளிப்படுத்து முடியுமோ.. அவ்வளவு முயற்சி செய்வார்கள்.

News Source :NewsTig

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்