கோலகலமாக ஆரம்பிக்கிறது கனடா டி20 லீக்! : கெயில் – சமி களத்தில்…

0
240
global t20 league canada news today

குளோபல் டி20 லீக்கின் முதல் போட்டி இன்று கனடாவில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

கிரிக்கெட்டை பொருத்தவரையில் பல்வேறு நாடுகளும் தங்களுக்கென கிரிக்கெட் லீக் தொடர்களை ஆரம்பித்து, சர்வதேச வீரர்களை அழைத்து விளையாடி வருகின்றது.

இதில் முதற்கட்டமாக கனடா குளோபல் டி20 லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடரொன்றை ஆரம்பித்துள்ளது.

இதில் சர்வதேசத்தின் பிரபலமான வீரர்கள் கலந்துக்கொள்வது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்றைய முதல் போட்டியில் டெரன் சமி தலைமையிலான டொரெண்டோ நெசனல்ஸ் மற்றும் கிரிஸ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஷ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

டொரெண்டோ நெசனல்ஸ் அணிசார்பில் பிரபல வீரர்களான டெரன் சமி, ஸ்டீவ் ஸ்மித், கீரன் பொல்லார்ட், கம்ரன் அக்மல், மொஹமட் சமி, ஜோன்சன் சார்லஸ், கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

மறுமுனையில் வான்கூவர் நைட்ஷ் அணிசார்பில் கிரிஸ் கெயில், என்ரே ரஷல், எவின் லிவிஸ், டீம் சௌதி, செட்விக் வோல்டன் ஆகியோரும் விளையாடவுள்ளனர்.

இந்த போட்டி கனடா நேரப்படி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இலங்கை நேரப்படி அதிகாலை 1.30க்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

global t20 league canada news today, global t20 league canada news today, global t20 league canada news today