நியூயோர்க் டைம்ஸ் செய்தியில் உண்மையில்லை – முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மறுப்பு

0
404
Former CBG Ajith Nivard Cabraal unrealistic New York Times newspaper

(Former CBG Ajith Nivard Cabraal unrealistic New York Times newspaper)

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் செய்தித் தாளில் வௌியாகிய ஆய்வுக் கட்டுரையில் உள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் மத்திய வங்கியிள் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

பாரிய கடன் சுமையை நாட்டின் மீது சுமத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும், இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்த செய்தியில் உண்மையில்லை என்று அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர், அந்தக் கட்டுரையில் கடந்த அரசாங்கத்துக்கும் முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்தை ஒப்படைக்கும் போதிருந்த 07 ட்ரில்லியன் ரூபா கடன் தற்போது 11.05 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தை பொறுப்பெடுத்தால் அதற்குறிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் ஏற்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய வங்கியிள் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Former CBG Ajith Nivard Cabraal unrealistic New York Times newspaper)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites