மஹிந்தவுக்கு தேர்தல் செலவுகளுக்காக கிடைத்த பணம் தொடர்பாக விசாரியுங்கள் – பொன்சேகா அழுத்தம்

0
332
fonseka urged proper investigation Mahinda presidential election money

(fonseka urged proper investigation Mahinda presidential election money)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அதற்காக செலவிடப்பட்ட பணம் கிடைத்த வழிமுறைகள் தொடர்பாக முறையான விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மாநாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இன்று இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீனா பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தி தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த போது, வேறு நாடுகளில் இருக்கின்ற வர்த்தகர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சட்டவிரோத தொடர்புகளை வைத்திருந்ததாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த வர்த்தகர்களால் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், அந்த நிதி எவ்வாறான வகையில் இலங்கையை வந்தடைந்தது மற்றும் அது எவ்வாறு மஹிந்த தரப்பினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது குறித்து ஆராய வேண்டும் என குறிப்பிட்டார்.

(fonseka urged proper investigation Mahinda presidential election money)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites