முதல் முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறிய ஜேர்மனி..! நேற்றைய போட்டிகள் ஒரே பார்வையில்..!

0
212
FIFA world cup russia highlights 27 06

(FIFA world cup russia highlights 27 06)
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 4 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் மெக்ஸிகோ-ஸ்வீடன் அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கணக்கில் ஸ்வீடன் அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

மற்றுமொரு எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக இருந்த நடப்பு சாம்பியன் ஜேர்மனி மற்றும் தென்கொரிய அணிகளுக்கிடையிலான போட்டி அமைந்திருந்தது. இதில் தென்கொரியா அணி 2-0 என்ற கோல்களின் அடிப்படையில் ஜேர்மனி அணிக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.

மூன்றாவது போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணி மற்றும் கொஸ்டாரிக்கா அணிகள் மோதின. இப்போட்டி 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

நான்காவது போட்டியில் சேர்பியா அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழத்தியமை குறிப்பிடத்தக்கது.

Video Source: FIFATV

FIFA world cup russia highlights 27 06

Timetamil.com