கெசினோ சூதாட்ட விடுதியில் வசமாக மாட்டினார் போலி வைத்தியர்

0
179
Fake Doctor arrested Casino Club

தான் ஒரு அரச வைத்தியர் எனக் கூறி தனது பெற்றோர், நண்பர்கள் மற்றும் இளம் பெண் ஒருவரையும் ஏமாற்றி பல நபர்களிடம் ஒரு கோடிக்கு அதிகமான பணத்தைப் பெற்று மோசடி செய்த கெசினோ சூதாட்டத்திற்கு அடிமையான போலி வைத்தியர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். (Fake Doctor arrested Casino Club)

சந்தேக நபரிடம் இருந்து இதயத்துடிப்பு மானி ஒன்றும் (ஸ்டெதொஸ்கோப்), பல பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் தனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தான் ஒரு அரச வைத்தியர் எனக் கூறி மோசடி செய்துள்ளார்.

தான் ஒரு வைத்தியசாலையை ஆரம்பிக்கப் போவதாக தனது நண்பர்களிடம் கூறி, பமுனுகம, கந்தானை, கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பிரசேங்களில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார்.

பமுனுகமை பிரதேச வாசியான இந்த நபர், அந்தப் பிரதேசத்திலுள்ள சர்வதேச பாடசாலையின் இளம் ஆசிரியை ஒருவரை தான் ஒரு வைத்தியர் என ஏமாற்றி மணமுடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு பின்னர் தனது மனைவியின் கல்யாண மோதிரம் மற்றும் பல தங்க ஆபரணங்களுடன் தலைமறைவாகியுள்ளார்.

இவரைத் தொடர்புகொள்ள முடியாமையினால் சந்தேகம் கொண்டு, அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, நீர்கொழும்பு பொலிஸார் கெசினோ சூதாட்டத்திற்கு அடிமையான சந்தேக நபரை கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் வைத்து கைதுசெய்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

tags :- Fake Doctor arrested Casino Club

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites