போதைப்பொருள் வர்த்தகர்களின் கிடுக்குப் பிடியில் உள்ள சிறார்களை பாடசாலையில் இணைக்க முஸ்திபு

0
365
Drugs Inspectorate initiate scheme identifying children trafficked drug

(Drugs Inspectorate initiate scheme identifying children trafficked drug)

​கொழும்பு நகரை அண்டிய பின்தங்கிய பிரதேசங்களில் போதைப் பொருள் கடத்தல்காரர்களிடமும், கொள்ளையர்களிடமும் சிக்கியுள்ள பாடசாலைக்கு செல்லாத சிறார்களை அடையாளம் கண்டு மீண்டும் அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக போதைபொருள் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் படி போதைப் பொருள் தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டவுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக செயலணியின் பணிப்பாளர் சமந்த குமார குறிப்பிட்டார்.

இந்த திட்டத்திற்கு அமைவாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் சுமார் நூறு பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த பிள்ளைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து மீண்டும் ஜூலை மாதம் 02 ம் திகதி முதல் பாடசாலைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

(Drugs Inspectorate initiate scheme identifying children trafficked drug)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites