கோட்டாபயவுக்கும், ஹிட்லருக்குமிடையில் இடையில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன?

0
415
Akila Viraj issued challenge Gotabaya Rajapaksa revoke US citizenship

(Akila Viraj issued challenge Gotabaya Rajapaksa revoke US citizenship)

ஜேமனின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹிட்லருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சில பொதுவான ஒற்றுமைகள் இருக்கின்றன.

அவற்றில் முக்கிய இரண்டைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஹிட்லரும், கோட்டாபயவும் புலால் உணவை உண்ணாதவர்கள்.

அத்துடன் இருவரும் நாட்டுக்கு வெளியில் ஒரு நாட்டின் குடியுரிமையை வைத்துக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முயற்சித்தார்கள்.

கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க பிரஜை என்பது போல், ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் அவர் ஒஸ்ரியா நாட்டின் பிரஜையாவார்.

இதேவேளை, இலங்கை மீது உண்மையான அன்பும், பக்தியும் இருந்தால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் முடிந்தால் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு காட்டுமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு சவால் விடுப்பதாகவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

(Akila Viraj issued challenge Gotabaya Rajapaksa revoke US citizenship)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites