இறக்குமதி செய்யப்படும் உழுந்துக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை

0
116
urad price hundred fifty tax increase Tamil latest news

உழுந்து இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. urad price hundred fifty tax increase Tamil latest news

வாழ்க்கைச்செலவுக்குழு  இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக அந்;த குழுவின் அங்கத்தவரும் சிரேஷ்ட ஆய்வாளருமான துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உழுந்துக்காக இதுவரையில் இருந்துவந்த 100 ரூபா இறக்குமதி வரி 150 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திக்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி கொடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.

இதேபோன்று தற்பொழுது உற்பத்தியாளர்கள் வைத்திருக்கும் உழுந்திற்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொள்ள இதன் மூலம் முடியும்.

இதேபோன்று எதிர்வரும் போகத்தில் உழுந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உழுந்தை உற்பத்தி செய்வதற்குரிய பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

tags :- urad price hundred fifty tax increase Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites