மாணவர்களையும் விட்டுவைக்காத பதவி மோகம் – பைசூலை கொலை செய்தவர்கள் சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைப்பு

0
198
tamilnews chilaw student leader murder suspects sent reconciliation

(tamilnews chilaw student leader murder suspects sent reconciliation)

சிலாபத்தில் அண்மையில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசூல் மீதான தாக்குதல் தொடர்பில், அரசாங்க சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 3 மாணவர்களையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அங்கு தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர்களான மாணவர்கள் 3 பேரும் கடந்த சில தினங்களாக சிலாபம், ஆரச்சிக்கட்டுவ சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் நாட்களில் நீர்கொழும்பு முதித சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 16 வயதான மொஹமட் பைசூல், சிலாபம் சவரான வித்தியாலயத்தின் பிரதான மாணவ தலைவனாக கடமையாற்றியுள்ளார்.

உயிரிழந்த மாணவனுக்கு அண்மையிலேயே பிரதான மாணவ தலைவன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பொறாமை கொண்ட சில மாணவர்களே மொஹமட் பைசூல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

(tamilnews chilaw student leader murder suspects sent reconciliation)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites