சம்பந்தனின் பதவியை மகிந்தவிற்கு பெற்றுக்கொடுப்பதே இலக்கு

0
102
opposition post give mahindha sixteen members group meet wimal

எதிர்கட்சி தலைவர் பதவிக்கு இரா சம்பந்தன் பொருத்தமானவரல்ல என ரணில் எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது. opposition post give mahindha sixteen members group meet wimal

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அந்;த குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 பேர் மகாநாயக்க தேரர்கள், முன்னாள் ஜனாதிபதி எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை நேற்றைய தினம் சந்தித்திருந்தனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- opposition post give mahindha sixteen members group meet wimal

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites