பேருந்தை பின்நோக்கி செலுத்துகையில் மரத்துடன் சிக்குண்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

0
134
one men death kalkiriyagama accident passenger bus Tamil news

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதி கல்கிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். one men death kalkiriyagama accident passenger bus Tamil news

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 18 வயதுடைய இளைஞரே உயரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவிலிருந்து கல்முனை வரை சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கல்கிரியாகம பிரதேசத்தில் தேநீருக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் பயணிப்பதற்கு தயாரான நிலையில் பேருந்தினை பின் நோக்கி எடுத்துள்ளதனை தொடர்ந்து, பேருந்து மிதி பலகையில் இருந்த இளைஞர் பேருந்துக்கும் மரம் ஒன்றிற்கும் இடையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
one men death kalkiriyagama accident passenger bus Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites