வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

0
89
one men arrest gun bullets mathugama Lankan police media

மத்துகம பலபடவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். one men arrest gun bullets mathugama Lankan police media

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டிலல் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலபடவத்தை பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
one men arrest gun bullets mathugama

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites