இராமேஸ்வரத்தில் மீட்கப்பட்ட குண்டுகள் 10 வாகனங்களை ஒரே நொடியில் சிதைக்ககூடியவை

0
95
India irameswaram bomb recover research high flammable

இராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் இரும்பினாலான பாலங்களை தகர்க்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை என்று வெடிபொருட்கள் புலனாய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். India irameswaram bomb recover research high flammable

குறித்த வெடிபொருட்களை மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பரிசோதகர் குணசேகரன் தலைமையிலான நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பரிசோதகர் குணசேகரன்,

குறித்த வெடிபொருட்கள் அனைத்தும் 1970-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை எனவும், 10 இற்கும் மேற்பட்ட வாகனங்களை ஒரே நேரத்தில் சேதப்படுத்தும் தன்மை கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள டில்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இராமேஸ்வரத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் கடந்த 25 ஆம் திகதி மீட்கப்பட்ட குறித்த ஆயுதங்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள், இலங்கை போராளிகள் குழுவினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் பூமியில் புதைக்கப்பட்டு சுமார் 30 முதல் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
India irameswaram bomb recover research high flammable

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites