உச்ச வேகத்தில் பயணிப்பவர்களுக்கு ஆபத்து!

0
105
Illegal car racers arrested France

சட்டரீதியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சில கார் சாரதிகள் தங்களுக்குள் போட்டி ஒன்றை வைத்துள்ளனர். இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Illegal car racers arrested France

இவர்கள் பிரித்தானியாவில் இருந்து ஒஸ்ரியா நோக்கி பந்தயம் வைத்துள்ளனர். இவர்கள் ஆறு பேரும் தனித்தனி ஆடம்பர காரில் பா-து-கலேயில் வைத்து கைது செய்யப்பட்டனர். A26 நெடுஞ்சாலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 153 கிலோமீட்டர்கள் வேகத்தில் இருந்து 256 கிலோமீட்டர்கள் வேகம் வரை பயணித்த நிலையிலேயே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் அதிவேகமாக Ferrari ஆடம்பர கார் மூலம் மணிக்கு 256 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த நபர் 51 வயதானவர் எனவும், அவர் உட்பட நால்வரது ஓட்டுனர் உரிமம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 750 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும், ஜூன் 29 ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து ஒஸ்ரியா நோக்கி கார் ஓட்டப்பந்தயம் ஒன்று இடம்பெற உள்ளது. அது முறையாக அனுமதி பெற்று இடம்பெற உள்ளது. இவர்கள் அதில் கலந்துகொள்ளும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :-  Illegal car racers arrested France

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்