காவி உடைக்கு இழைத்த துரோகத்திற்கு அரசாங்கமே பொறுப்பு

0
105
galgoda gnasara challenging government Tamil latest news

பௌத்த நாடான இலங்கையில் பௌத்த மதகுரு ஒருவர் சிறைவைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார். galgoda gnasara challenging government Tamil latest news

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தம்மை சிறைக்குள் அடைக்க கடந்த மற்றும் நடப்பு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், தெரிவித்த அவர், சிறைக்குள் அடைத்து காவியை உடையை கழற்றி காற்சட்டை அணிவிக்க சில சக்திகள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றிற்கு தமது கடமையை சுயாதீனமாக மேற்கொள்ள இடமளிக்கவில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான அரசியல் கட்சி ஒன்றின் தலைவரும் அவருக்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்கள், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் இணைந்தே காவி உடைக்கு இந்த துரோகத்தினை இழைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

tags :- galgoda gnasara challenging government Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites