அரசாங்கத்திற்கு முடியாமையினாலேயே தாம் அதனை செய்து முடிப்பதாக தெரிவித்தேன்

0
87
former president mahindha rajapaksha commend government

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலேயே ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் தாம் கருத்து தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். former president mahindha rajapaksha commend government

கதிர்காமம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கத்தினால் இயலாதுள்ளது.

எனவே அவரை அழைத்து வருவதை தாம் மேற்கொள்வதாக தெரிவித்த கருத்து அரசாங்கத்திற்கு உதவும் நோக்கிலேயே தெரிவிக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

ஆனால் உதயங்க வீரதுங்க தனது கட்டுபாட்டிற்குள் காணப்படுவதை போன்ற அரசாங்கம் சித்தரித்து வருவதாகவும் அதில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
former president mahindha rajapaksha commend government

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites