மூழ்கிக்கொண்டிருந்த கப்பலிலிருந்து 11 மாலுமிகள் மீட்பு!!

0
113
eleven passenger recover ship Colombo fort latest news

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலிலிருந்து 11 மாலுமிகள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். eleven passenger recover ship Colombo fort latest news

கொழும்புத் துறைமுகத்திலிருந்து 11.6 கடல் மைல் தொலைவில், ஆரவாய Pioneer என்ற சரக்குக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கப்பலிலிருந்து விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கையையடுத்து இரு அதிவேகத் தாக்குதல் படகுகள் விரைந்து சென்று, கப்பலிலிருந்த மாலுமிகளை மீட்டனர்.

டொமினிக்கன் குடியரசு கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலிலிருந்து தலைவன்; மற்றும் 10 மாலுமிகள் மீட்கப்பட்டு கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீட்கப்பட்ட கப்பலின் கப்டன் உள்ளிட்ட 10 மாலுமிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.என்பதுடன் ஒரு மாலுமி இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். மேலும்,மூழ்கியுள்ள கப்பல் இந்தியாரொருவருக்குச் சொந்தமானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tags :- eleven passenger recover ship Colombo fort latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites