மகிந்தவிற்கு சீனா இவ்வளவு பணம் வழங்கியதா – புள்ளிவிபரமாக அம்பலபடுத்தியது நிவ்யோர்க் டைம்ஸ்

0
385
Mahinda Rajapaksa said activities underworld groups increasing daily

ஜனாதிபதி தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. china provide big amount money president election detail

இலங்கையை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு தன்வசப்படுத்தியது என்பதை விரிவாக ஆய்வு செய்து அந்த பத்திரிகை விவரணகட்டுரையாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவுடன் மகிந்த ராஜபக்ச மிகநெருக்கமான உறவுகளை வைத்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அண்மித்த போது, மகிந்த ராஜபக்சவிற்கு நெருங்கியவர்களுக்கு நிதி பாய்ச்சல் மேற்கொள்ளப்பட்டதாகவும்,

குறிப்பாக மகிந்தவிற்கு நெருக்கமானவர்கள் சீனாவில் தங்கியிருந்தனர் எனவும் அவர்களுக்கே நிதிபாய்ச்சல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் 7.6 மில்லியன் டொலர் நிதி, சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின், ஸ்டேண்டட்  ச்சார்ட்டட் வங்கி கணக்கின் ஊடாக மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

தேர்தலுக்கு 10 நாட்கள் முன்னதாக, 3.7 மில்லியன் டொலருக்கு காசோலை வழங்கப்பட்டது.

678,000 டொலர் பெறுமதியான ரிசேர்ட்கள் மற்றும், ஏனைய பரப்புரைப் பொருட்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.

297,000 டொலருக்கு ஆதரவாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் (பெண்களுக்கான சேலைகள் உள்ளிட்ட) பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

மகிந்தவுக்கு ஆதரவு அளித்த முக்கியமான பௌத்த பிக்குவுக்கு, 38,000 டொலர் வழங்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வசிப்பிடமாக இருந்த அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு காசோலைகள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான கொடுப்பனவுகள், சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின் துணை கணக்குகளின் மூலமே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- china provide big amount money president election detail

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites