கட்டிப்புடி மாயவன் சினேகனுக்கு கல்யாணமா!

0
224

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த கவிஞர் சினேகனுக்கு திடீர் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘பாண்டவர் பூமி’ படத்தின் ‘தோழா தோழா’ பாடல், ‘ஆட்டோகிராப்’ படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் என பல அற்புதமான பாடல்களை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் எதார்த்தமாக கட்டிப்பிடித்து பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் அவரிடம் உள்ள பல தனித்த திறமைகள் அவரை நேர்மறையாக காட்டுகிறது.

இதனால் அவருக்கு கட்டிபிடி வைத்தியர் என்னும் பெயர் கூட வந்தது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தான் ஒரு தனி நூலகம் அமைத்து அதில் ஒரு இலட்சம் புத்தகங்களை வைக்க வேண்டும் என கூறி வந்தார். தற்போது அந்த வேளைகளில் மும்முரமாக உள்ள சிநேகனுக்கு திருமண சப்தமும் கேட்டுவிட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வந்த ஸ்நேகனின் அப்பா கூறியது போல் அவர் கண்ணால் காண திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

இதேவேளை, அவருக்கு நெருங்கிய பெண்ணுடன் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல, இந்த திருமண அறிவிப்புகளை எல்லாம் எதிர்வரும் மாதங்களில் உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Tag: Bigg Boss Snehan Wedding News