உலகின் மிக அழகற்ற நாய் இது தானாம்! இதுக்கெல்லாமா போட்டி வைப்பாங்க!

0
158
World Most Ugly Dog Competition America English Bulldog Won

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெடலுமா நகரில் ஆண்டுதோறும் அழகற்ற நாய்களுக்கான போட்டி நடைபெறும். World Most Ugly Dog Competition America English Bulldog Won

இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வித்தியாசமான நாய்கள் பங்குபெறும்.

அருவருப்பான தோற்றம் கொண்ட நாய்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவும். அதில் மிகவும் அசிங்கமான நாயை நடுவர்கள் தேர்வு செய்து வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

இந்நிலையில். இந்தாண்டு நடைபெற்ற உலக அழகற்ற நாய்களுக்கான போட்டியில் அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த நாய் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.

இங்கிலீஷ் புல்டாக் வகையைச் சேர்ந்த இந்த நாய் பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. சீசா சீசா என்ற பெயர் கொண்ட நாயின் நாக்கை பார்ப்பதற்கு மிகவும் அழகற்றதாக உள்ளது.

சென்ற ஆண்டு மார்தா என்ற நாய் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற சீசா சீசாவிற்கு வெற்றி கோப்பையுடன் ஆயிரத்து ஐநூறு டாலர் பரிசுத் தொகையும், அத்துடன் நியூயார்க்கில் நடைபெறும் என்.பி.சி. டுடே ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்.

tags :- World Most Ugly Dog Competition America English Bulldog Won

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

அமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை!

வாகன விபத்தில் கம்போடியா இளவரசர் படுகாயம்-மனைவி பலி!

மருமகள் மேகன் மார்க்கலுக்கு மாமனார் சார்லஸ் செய்த வேலை!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்