கட்சி செயலாளர்களை இன்று சந்திக்கிறார் மகிந்த தேசப்பிரிய

0
147
tamilnews provincial council election hope next january

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்களுடனான சந்திப் பொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நடத்தவுள்ளார்.(Mahinda Deshapriya meet party secretaries)

இச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றது.

அதேபோல் இன்னும் மூன்று மாதங்களில் வடமேல், வடக்கு மற்றும் மத்திய மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடை யவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைக்காது நடத்துவது தொடர்பில் ஏற்கனவே கட்சிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் வாய்மொழி மூலமும் தேர்தலை நடத்த வேண்டுமென்பது தொடர்பிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறான நிலையில் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலா புதிய முறையிலா நடத்துவது என்பது குறித்து பேசப்படவுள்ளதாக கட்சி செயலாளர்கள் தரப்பினர் குறிப்பிட்டனர். அத்துடன் இச்சந்திப்பின் போது தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் பதிவு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பேசப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

tags :- Mahinda Deshapriya meet party secretaries

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites