ஹிட்லர் ஆட்சி : முட்டாள்தனமான அறிவுரை : ஜேர்மனி தூதுவர்

0
140
Joern Rohde Wedaruwe Upali Thero

ஹிட்லரைப் போன்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற முட்டாள்தனமானது என இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட் தெரிவித்துள்ளார்.(Joern Rohde Wedaruwe Upali Thero)

இலங்கைக்கு ஒரு ஹிட்லர் தேவை என்று உபாலி தேரர் வெளியிட்டுள்ள மூர்க்கத்தனமான கருத்துக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிட்ட கண்டனங்களுடன் தாம் முற்றிலும் இணங்கிப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘காவி உடை அணிந்து கொள்வது, பொறுப்பற்ற முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்காது என்பதையே இது நிரூபிக்கிறது.

எமக்கு இன்னும் அதிகமான ஜனநாயகம், தேவை. உலகம் முழுவதற்கும் அது தேவை.” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

tags :- Joern Rohde Wedaruwe Upali Thero

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites