பிரான்ஸில் குடும்பங்களிற்கிடையே இடம்பெறும் துப்பாக்கிச்சூடு!

0
367
Family fights leads shooting- four injured

நேற்று திங்கட்கிழமை நண்பகலில், குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதனால் நால்வர் காயமடைந்துள்ளனர். Family fights leads shooting- four injured

குறித்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உறவினர்கள் என்றபோதும், ஒருவருக்கொருவர் எதிரிகள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரு குடும்பங்களுக்குமிடையே பண கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் இருந்ததாகவும் அறிய முடிகிறது. ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இதில் இருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றைய இருவருக்கும் உயிராபத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரு குடும்பங்களும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் என தெரியவந்துள்ளது. இக்குடும்பத்தினரை முன்னதாகவே காவல்துறையினர் அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

tags :- Family fights leads shooting- four injured

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்